ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா? வழக்கைக் கையில் எடுக்கும் சிபிஐ – armstrong murder case cbi probe approved by supreme court

சிபிஐ விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து செம்பியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

விசாரணையில் 27 பேர் கைது செய்யப்பட்டன முக்கிய குற்றவாளியாக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு கைது செய்யப்பட்டார். மேலும் ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தார். இதனை தொடர்ந்து ஏ1 குற்றவாளியான வடசென்னையின் தாதா நாகேந்திரன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் உயிரிழந்தார்.

Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!

தொடர்ந்து மீதமுள்ளவர்கள் மீது தற்பொழுது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது.

திமுக ஆட்சியில் சிபிஐ விசாரணை எதிர்த்து மேல்முறையீடு

ஆனால், கடந்த திமுக ஆட்சியில் சிபிஐ விசாரணை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது.
இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தது. தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தவெக அரசு திரும்ப பெற்று உள்ளது.

தமிழக அரசு மேல்முறையீடு வாபஸ்..

இந்த வழக்கில், முந்தைய அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அரசின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கியது. அதேசமயம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கவும் ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த கட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கைக் கையில் எடுக்கும் சிபிஐ!

இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் விரைவில் வழக்கின் விசாரணையை முழுமையாக கையில் எடுக்க உள்ளனர். இதற்காக செம்பியம் காவல்துறையிடம் இருந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்று, கொலை சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் தீவிரமாக விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

Source link