போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள்; வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாமதங்களுக்கும் மேலாக நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராகக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

உண்ணாவிரதப் போராட்டம், அமைதி பேரணி என சட்டப்பூர்வமான முறையில் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இது குறித்தான தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லட் குண்டுகள் என்பது மிகச் சிறிய அளவிலான ஈயத்தால் செய்யப்பட்ட  குண்டுகள் ஆகும்.  இந்த குண்டுகளைப் பிரயோகிக்கும் போது எதிரில் இருப்பவர்களுக்குக் கண்பார்வை இழப்புகள் ஏற்படும். சிறிய அளவிலான இந்த குண்டுகள் தோல், நரம்புகள் மற்றும் எலும்புகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதே நேரத்தில், மார்பு, தலை மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்படும் போபொது உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. இத்தகைய மோசமான குண்டுகளைப் பாதுகாப்பது படையினர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.  

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குருகிராமை சேர்ந்த இர்ஷாத் மன்சூரி (25) எனும் இளைஞருக்கு டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின் போது அவரது கண்ணின் அடிப்பகுதி மற்றும் கழுத்துப்பகுதில் இருந்து பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்தான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இருப்பினும், இதற்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link