அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் பதற்றம்; செங்கடல் வழியை மூடிய ஹவுதிக்கள்

அமைதி ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்த இரு தரப்பு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இதனிடையே,  ஈரானும் எத்தனை தடைகள் வந்தாலும் போரிடத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில், சவூதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் செங்கடல் வழியை மூடியுள்ளதாக ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக அமெரிக்கா மற்றும் ஈரானிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதில், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் அணு சக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கத் தாக்குதல் நடத்தி வருகிறது.   

இதையடுத்து அமெரிக்கப் படைகள் உள்ள பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே,  ஈரானின் ஆதரவு அமைப்புகள் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில், அமெரிக்க வீரர்கள் இரண்டு பேர் உயிர் இழந்தனர்.

இந்நிலையில்,  அமெரிக்காவிற்கு சவூதி அரேபியா ஆதரவாகச் செயல்பட்டு வருவதால், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் செங்கடல் வழியை ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான ஹவுதி,  அப்பாதையை (பாப்-எல் மண்டிப்) மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. ஹார்மோசை தொடர்ந்து செங்கடல் வழியும் மூடப்பட்டது, உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் என்று கூறப்படுகிறது.  

Source link