ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு; இந்தியாவிற்கு நெருக்கடி தரும் அமெரிக்கா

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   

’உலகின் மருந்தகம்’ என்று அழைக்கப்படும் இந்தியாவிலிருந்து உலகின் ஏராளமான நாட்டிற்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்காஅவிர்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 40 சதவீத மருந்துகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.   

குறிப்பாக, கடந்த 2024 -2025 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 9.7 பில்லியின் டாலர் மதிப்பிலான மருந்துப் பொருட்கள்  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் உலகளாவிய மொத்த மருந்து ஏற்றுமதியான 25.8 பில்லியின் டாலரில் 38 சதவீதம் என்று உலக ஆராய்ச்சி முன் முயற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்களை தங்கள் நாட்டிற்கு இழுக்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஜெனரிக் மருந்து பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லை. அதன் பிறகு முதல் ஆண்டில் ( ஆகஸ்ட் 2028) 100 சதவீத வரி உயர்த்தப்படும், அதற்கடுத்த ஆண்டு (ஆகஸ்ட் 2029) 200 சதவீத வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு உலக அளவிலான மருந்து நிறுவனங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் மிக முக்கிய மருந்து பொருள் ஏற்றுமதி நாடானா இந்தியாவிற்கு இந்த அறிவிப்பு மிகப் பெரிய பொருளாதார ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.   

Source link