தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத்திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர். இந்​த சூழலில், தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு, ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயரை மாற்றி தவெக தலைமையிலான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்ட விரிவாக்கத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் வரை காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
