காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடகா மறுப்பு

புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுத்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகின்றன. ஆணையத்தின் முந்தைய கூட்டம் ஜூன் 23ம் தேதி கூடியது.

இதுவரை 52 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 53வது ஆணையக் கூட்டம் புதுடில்லியில் இன்று (ஜூலை 22) கூடியது. கூட்டத்திற்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமை ஏற்றார்.

தமிழகம் சார்பில் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சத்திய பிரதா சாகு, காவிரி தொழில் நுட்ப குழுத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடகா தரப்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுப்பு தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைவு, பெங்களூருவின் குடிநீருக்கு தண்ணீர் தேவை இருக்கிறது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் நிலவுகிறது என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link