காவிரி நதிநீர் விவகாரம்; கர்நாடகா அரசு எடுத்த முடிவால் ஆபத்தில் தமிழ்நாடு!

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 100 ஆண்டுகளும் மேலாகத் தமிழ்நாடு – கர்நாடகா இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. இது தொடர்பான வழகில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு நீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பை அமல்படுத்தவும், நீர் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீர் மேலாண்மை மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, இந்த இரண்டு அமைப்புகளில் அவ்வப்போது கூடி இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தன்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று (22-07-26) டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பிலிகுண்டுலுவில் 3.422 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி விகிதாச்சார அடிப்படையில் நீரை திறக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், கர்நாடகா அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள், மழைப்பொழிவு குறைவாக உள்ளது. அதனால் குடிநீருக்கும் பெங்களூரு நகருக்கும் காவிரி நீர் தேவைப்படுகிறது எனக் கூறி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க மறுப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, மழைப்பொழிவு குறைவாக இருப்பதன் அடிப்படையில் காவிரி நீர் பங்கில் முடிவு செய்யப்படும் என ஆணையம் தெரிவித்தது. காவிரி நதிநீர் கண்காணிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link