சூர்யா பாடிய பாடலின் ரிலீஸ் அப்டேட்!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. சூர்யா 46வது படமாக உருவாகும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. 

இப்படம் 20 வயதுள்ள மமிதா பைஜூ 40 வயது மேல் இருக்கும் சூர்யாவை காதலிக்க, அதில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதைக் குறிப்பிடும் வகையில் சமீபத்தில் படத்தின் முதல் பாடலாக ‘பட்டாம்பூச்சி’ வெளியாகியிருந்தது. காதல் பாடலாக அமைந்திருந்த இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சூர்யா இப்படத்தில் ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளதாக ஜிவி பிரகாஷ் ஒரு அப்டேட் கொடுத்தார். பின்பு அப்பாடல் படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவரும் என அண்மையில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான புரொமோ நாளை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் சூர்யா ஒரு நிகழ்ச்சியில் நடனமாடுவது போல் இடம் பெற்றுள்ளது. சூர்யா பாடிய பாடல் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். 

Source link