பிபா தலைவரை ஐநா பொதுச்செயலாளராக தேர்வு செய்ய டிரம்ப் விருப்பம்!

நியூயார்க்: பிபா தலைவர் கியானி இன்பான்டினோவை ஐநா பொதுச் செயலாளர் ஆக தேர்வு செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச்செயலாளராக ஆன்டோனியோ குட்டரெஸ் உள்ளார். அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில், பிபா தலைவராக இருக்கும் கியானி இன்பான்டினோ ஐநா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என டிரம்ப் விரும்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. அவர் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறார். அனைவரையும் ஒரு சேர கொண்டு வரும் ஆற்றல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கியானி இன்பான்டினோவுக்கு உள்ளது என டிரம்ப் நம்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பதவியை அடைவதற்கு கியானி இன்பான்டினோவுக்கு விருப்பம் உள்ளதா அல்லது அவருடன் இது பற்றி டிரம்ப் விவாதித்து உள்ளாரா என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஏற்பாடுகளின் போது டிரம்ப் மற்றும் கியானி இன்பான்டினோ இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.

ஐநா.,வின் பொதுச்செயலாளர் ஆக தேர்வு செய்யப்படுவதற்கு ஐநா பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற வேண்டும். அதில் ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் பெற்ற நிரந்தர உறுப்பு நாடுகள் அடக்கம். இதற்கு பிறகு, அதற்கு ஐநா பொதுச் சபை அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

Source link