சீனா நோக்கிச் சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; திடீரென இந்தியாவுக்கு வருவது ஏன்?!

சீனாவுக்குச் செல்லவிருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள், திடீரென திசைமாற்றப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​இந்திய நோக்கி வரும் கப்பல்கள்இந்த இக்கட்டான சூழலை சமாளிக்​கும் வகை​யில் ரஷ்​யா​விடம் இருந்து முன்னெப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்ணெய்யை கொள்​முதல் செய்​யத் தொடங்​கி​ இருக்கிறது.சமீபத்தில் மட்டும் நம் நாடு, 3 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் சீனாவுக்கு செல்ல இருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப அவை நம் நாட்டு துறைமுகங்களை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.இந்திய நோக்கி வரும் கப்பல்கள்சமீபத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து, மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கி இருக்கிறது. இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கத் தொடங்கியிருப்பதால் அதன் விலை விரைவில் உயரக் கூடும் எனும் கூறப்படுகிறது.

Source link