இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தித் தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று (22-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மாணவர்களின் கோரிக்கை, வினாத்தாள் கசிவுகள் தொடர்பாக அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை. இந்தப் பிரச்சினையை நாம் அரசியல் ஆக்கக்கூடாது. இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடுவது பொருத்தமற்றது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு தீவிரமான பிரச்சினை, இதற்கு ஆழமான விவாதம் தேவைப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு விளக்கக்காட்சியை வழங்கினார், அதில் அவர் சுமார் 150 தாள் கசிவுகள் குறித்து விவாதித்தார். இது விசாரணைக்குரிய ஒரு விஷயம், மேலும் ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற முறையில், இது குறித்து சந்தேகமின்றி விசாரித்து, உண்மையை பொதுமக்களுக்கும் நாட்டிற்கும் எடுத்துரைக்கும்.
கலந்துரையாடல் மிகவும் சுமுகமான சூழலில் நடைபெற்றது. நாங்கள் அவர்களின் கருத்துக்களை மிகவும் அமைதியாகக் கேட்டோம். அவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர்களிடம் கூறினேன். அவர்கள் அந்தக் கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துவிட்டார்கள். நாங்கள் கலந்துரையாடலுக்குத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்களிடம் கூறினேன். அவர்கள் எப்போது கேட்டாலும், அந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
