டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் அணுமின் நிலையம் அல்லது பாலங்கள் மீது அமெரிக்கா வெடிகுண்டு வீசும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமைதி ஒப்பந்தம் முறிவு காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ள ஈரான், அதன் வாயிலாக செல்லும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்த நேரம் முதல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எந்த கப்பல் மீதும் ஏவுகணை, டிரோன் அல்லது வேறு எந்த ஆயுதங்களாலும் ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் ஒரு பாலம் அல்லது மின் நிலையம் மீது வெடிகுண்டுகளை வீசி அமெரிக்கா அழிக்கும். அது தலைவர் டெஹ்ரானிலோ அல்லது அதன் அருகில் அமைந்தாலும் சரி. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
