புதுடில்லி: பாகிஸ்தான் ரகசியமாக அணுஆயுதங்களை பரப்பிய வரலாறு கொண்ட நாடு, என மத்திய வெளியுறவு அமைச்சகம்

புதுடில்லி: பாகிஸ்தான் ரகசியமாக அணுஆயுதங்களை பரப்பிய வரலாறு கொண்ட நாடு, என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை அமெரிக்க செனட் சபையில் அந்நாட்டு உளவுத்துறை சமர்பித்தது. அப்பிரிவின் தலைவர் துளசி கப்பார்ட் சம்ரப்பித்த அந்த அறிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளை போன்று பாகிஸ்தானாலும் அமெரிக்காவுக்கு அணுசக்தி அபாயம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். மேலும் அதிநவீன ஏவுகணை அமைப்புகள் தொடர்பாக பாகிஸ்தான் ஆராய்ச்சி செய்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் விவகாரம் கவனிக்க வேண்டியது என்றாலும், அந்நாட்டுக்கு என ஒரு வரலாறு உண்டு. ரகசிய அணுஆயுதங்கள் அதிகமாக பரப்பிய வரலாறு கொண்டது. அவர்களின் இந்த ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளால் உலகிற்கு எவ்வளவு பெரிய அச்சுறத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதை இந்த அறிக்கை வெளிக்காட்டுகிறது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது குறிவைப்பதும், அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link