சென்னை: தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், ‘டெண்டர்’கள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பீட்டு செலவை குறைப்பதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, பல்வேறு துறைகளில், பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. இதற்காக, பல துறைகளில் கமிஷன், முன்பணமாகவும் பெறப்பட்டு இருந்தது.
இத்தகவல்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகினறன.
இதையடுத்து, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணி, நீர்வளம், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, அறநிலையத் துறை என, பல துறைகளில் விடப்பட்ட டெண்டர்கள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
விரைவில் மேலும் பல துறைகளிலும் டெண்டர்கள் ரத்து செய்யப்பட உள்ளன. டெண்டர்கள் ரத்து செய்வதால், அரசின் செலவு குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
முந்தைய தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சியில், நிர்வாக நடைமுறை எனக் கூறி, டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின், புதிதாக போடப்பட்ட டெண்டர்களில் திட்ட மதிப்பீட்டு தொகை, 20 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.
இப்போது வரை, ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, மறு டெண்டர் கோரும்போது, திட்ட மதிப்பீடு தொகை, 10 முதல் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு நிதித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
