இது குறித்து எரிசக்தி பொருளாதார நிபுணர் கிரீத் பாரிக் கூறுகையில், “இந்தியா தனது எரிவாயு பயன்பாட்டை, குறிப்பாகத் தொழில் துறை மற்றும் மின்சாரத் துறையில் பெருமளவு குறைக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய தினசரி இயற்கை எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (MMSCMD) ஆகும். இதில் 97.5 MMSCMD மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வாரம் நிலவிய அசாதாரணமான போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் இறக்குமதியில் 47.4 MMSCMD விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, பொதுத்துறை எரிவாயு நிறுவனங்கள் மாற்று நாடுகளிலிருந்து எல்.என்.ஜி-யைப் பெற அவசர ஆர்டர்களை வழங்கியுள்ளன.
