புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், கனரக வாகனங்களின் விற்பனை 5 முதல் 7 சதவீதம் வரை உயரும் என, அசோக் லேலாண்டு நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாகன பிரிவு தலைவர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இ துகுறித்து அவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு, வர்த்தக வாகன சந்தைக்கு சாதகமாக இருந்ததால் தேவை அதிகரித்து, வலுவான தொடக்கத்தை தந்தது. கடந் த ஜூனில் வர்த்தக வாகன சந்தை இயல்பு நிலைக்கு திரும்பினாலும், தேவை வலுவாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு, கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும்.
குறிப்பாக, பயன்பாட்டு காலம் முடிந்த வாகனங்களின் பரிமாற்ற தேவை, இத்துறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உள்ளது. மத்திய அரசின் உட்கட்டமைப்பு செலவுகள், தனியார் நிறுவன முதலீடு ஆகியவை வர்த்தக வாகன தேவையை அதிகரிக்கும்.
மேற்காசிய போர் சவாலாக இருந்தாலும், ஏற்றுமதி சராசரி அளவுக்கு உயர்ந் து உள்ளது.
அண் மையில் அறிமுகமான ஏர் சஸ்பென்ஷன் லாரி அணிவகுப்பு, 42 மற்றும் 49 டன்னுக்கு இ டைப்பட்ட, 46 டன் எடை பிரிவில் வந்தது, வா டி க்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள து.
இவ் வாறு தெரிவித்தார்.
