சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று பழனிசாமி தலைமையில் நடந்த, நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.
தனக்கு எதிராக செயல்பட்ட தங்கமணியின், நாமக்கல் மாவட்ட செயலர் பதவியை பழனிசாமி பறித்தார்; பின், அமைப்பு செயலர் பதவி கொடுத்தார். அதை, தங்கமணி ஏற்கவில்லை. இந்நிலையில், அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை, தங்கமணி புறக்கணித்துள்ளார்.
இதேபோல, இன்று நடைபெற உள்ள கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை, முன்னாள் அமைச்சர் வேலுமணியும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் புறக்கணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்றைய கூட்டத்தில், ‘இந்த இயக்கம், யார் இல்லையென்றாலும் இயங்கும் வல்லமை கொண்டது. யார் வெளியேறினாலும், அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது’ என, பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
