கனடாவில் வசிக்கும் ஒரு இந்திய ஐ.டி நிபுணர், புலம் பெயர்ந்த இந்தியர்கள் வெளிநாடுகளிலேயே தங்குவதற்கு சுத்தமான காற்று, நல்ல உணவு அல்லது நாகரிக உணர்வு ஆகியவை முதன்மை காரணங்கள் அல்ல, மாறாக அங்குள்ள பணி கலாச்சாரமே முக்கியக் காரணம் என்று கூறியது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம்… ஆனா எனக்கு இந்த வேல வேண்டாம்; இளைஞர் சொன்ன காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
கடந்த 7 ஆண்டுகளாகக் கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் வசித்து ஐ.டி துறையில் பணியாற்றி வரும் ரோஹித் குப்தா, தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளதாவது, “நான் 7 வருடமாக கனடாவில் இருக்கேன். இங்கு இருக்கும் தண்ணி, உணவு, காற்று, சிவிக் சென்ஸ் நன்றாக இருக்கும், அதனால்தான் யாரும் இந்தியாவுக்குத் திரும்ப வரவில்லை என்று நிறைய பேர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இல்லை” என்று கூறினார்.
தன் வாழ்நாளின் முதல் 20 முதல் 25 ஆண்டுகளை இந்தியாவில் கழித்து, அதே காற்றைச் சுவாசித்து, அதே நீரைக் குடித்து வளர்ந்த ஒருவர், வெறும் காற்றுக்காகவும் தண்ணீருக்காகவும் மட்டும் வெளிநாட்டில் தங்கிவிட மாட்டார் என்று சுட்டிக்காட்டிய அவர், உண்மையான காரணம் அங்குள்ள ‘ஒர்க்- லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) தான் என்றார்.
கனடாவில் வேலை நேரம் – லீவ் ரூல்ஸ்
கனடாவில் குறிப்பிட்ட வேலை நேரம் கடுமையாக மதிக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு வேலை நேரம் முடிகிறது என்றால், பாஸை ஈர்க்க வேண்டும் என்பதற்காக யாரும் தாமதமாக இருக்க வேண்டியதில்லை. மேலாளர்களே சரியான நேரத்திற்குப் கிளம்பிவிடுவார்கள். லேட்டாக வேலை செய்வதால் எந்த ஸ்பெஷல் பாராட்டும் கிடைக்காது.
இந்தியாவில் மேனேஜர்களைக் கவர இரவு வரை வேலை செய்ய வேண்டியுள்ளது. 2 அல்லது 3 நாட்கள் லீவ் கேட்டால் கூட மாற்று ஆளை ஏற்பாடு செய்து, முழு ஹேண்ட் ஓவரையும் கொடுத்த பிறகே லீவ் அப்ரூவ் செய்யப்படுகிறது. ஆனால் கனடாவில் 15 முதல் 20 நாட்கள் வரை சிரமமின்றி விடுப்பு எடுக்கலாம். ‘ஹோம்சிக்’ (Homesickness), சுற்றுலா திட்டங்கள் அல்லது மன அழுத்தம், சோர்வு போன்ற காரணங்களைக் கூறினாலே ஏற்றுக்கொள்ளப்படும். உண்மையைப் பேசி பிரேக் கேட்பதை அங்குள்ள மேனேஜர்கள் பாராட்டுவார்கள்.
இணையவாசிகளின் அதிரடி கமெண்ட்ஸ்
ரோஹித் குப்தாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். “அதிக சம்பளம்தான் முக்கியக் காரணம். இல்லையென்றால், வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சமையல் செய்து, பாத்திரம் கழுவி, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடியாமல் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “டாலர் சிம்பல் தான் காரணம், வேற ஒன்னும் இல்ல சகோ” என்று மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
