தளபதி விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு வெறும் பட ரிலீஸாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான திருவிழாவாக மாறியுள்ளது. விஜயின் கடைசி திரைப்படம் என்ற உணர்வில், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
படம் வெளியாகும் முன்பே நேற்று (ஜூலை 22) இரவு முதலே ரசிகர்கள் சிறப்பு பூஜைகள், பாலாபிஷேகம், தேங்காய் உடைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சென்னையில் விஜயின் பிரம்மாண்ட கட்-அவுட்கள் மற்றும் பேனர்கள் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் மேளதாளத்துடன் நடனமாடி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
VIDEO | Chennai, Tamil Nadu: Fans celebrate the release of Chief Minister C Joseph Vijay’s film Jana Nayagan.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/S1t0aDPEce
— Press Trust of India (@PTI_News) July 23, 2026
குறிப்பாக கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் விஜயின் போஸ்டருக்கு ஆரத்தி எடுத்து ரசிகர்கள் வழிபட்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் படம் பார்க்க வந்த வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன. நடிகை திரிஷாவும் அதே திரையரங்கில் படம் பார்க்க வருவார் என தகவல்கள் வெளியான நிலையில், அவரும் படம் பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், விஜய் நேற்று நடைபெற்ற சிறப்புக் காட்சியில் திரைப்படத்தை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
திருநெல்வேலியில் உள்ள முத்துராம் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் முன்பு டிஜே இசையுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். கன்னியாகுமரியில் “ஜன நாயகன் – ஒன் லாஸ்ட் டைம்” என்ற வாசகத்துடன் மிகப்பெரிய கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டியும் பரவியுள்ளது. ஜப்பானிலிருந்து ரசிகர்கள் குழுவாக சென்னை வந்து விஜயின் கடைசி பட வெளியீட்டை நேரில் கொண்டாடியுள்ளனர். கேரளாவின் வயநாட்டில் அதிகாலை 6 மணி காட்சிக்கே ஏராளமான ரசிகர்கள் திரண்டு திரைப்படத்தை கொண்டாடினர்.
Chennai:
Celebrations erupt at Vettri theatre for release of ‘Jana Nayagan’; Actor Keerthy Suresh arrives to watch film. pic.twitter.com/nGYPxoMYAt
— News Arena India (@NewsArenaIndia) July 23, 2026
மும்பையில் இருந்து வந்த ரசிகர் ஒருவர், “15 ஆண்டுகளாக விஜயின் படங்களை பார்த்து வருகிறேன். இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கடைசியாக அவரை திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதே எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், “நான் மும்பையைச் சேர்ந்தவன். ஜென்சி இசையைச் சேர்ந்த இளைஞனாக இருந்தாலும் விஜயை மிகவும் விரும்புகிறேன். இந்தப் படத்தை விமர்சிக்க அல்ல, கொண்டாடவே வந்துள்ளேன்,” என்றார்.
ஆறு மாதங்களுக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் 3,500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கைக் குழு அனுமதி தாமதமானதால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று தற்போது திரைக்கு வந்துள்ளது.
Tirunelveli, Tamil Nadu: Fans celebrate the release of Chief Minister C. Joseph Vijay’s film ‘Jana Nayagan’ with great enthusiasm pic.twitter.com/vV8kfplQ37
— IANS (@ians_india) July 23, 2026
இந்நிலையில், திரைப்பட வெளியீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக அமைச்சர் அருண்ராஜ் பதிலளிக்கையில், “போராட்டங்களையும் திரைப்பட வெளியீட்டையும் ஒப்பிட வேண்டாம். மக்களின் பிரச்சினைகள் தனியாக இருக்கின்றன. இந்தப் படம் ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஒன்று,” என்று கூறினார்.
வசூல் ரீதியாக ‘ஜன நாயகன்’ மிகப்பெரிய தொடக்கத்தைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் நிலையில் உள்ளன. சென்னை நகரில் பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன. ஆனால் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் வட இந்திய மாநிலங்களில் முன்பதிவு சற்று மந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படத்தின் டப்பிங் பதிப்புகளுக்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு இல்லாவிட்டாலும், தமிழகத்தில் விஜயின் அபாரமான ரசிகர் பட்டாளம் காரணமாக படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைக்கும் என திரையுலக வட்டாரங்கள் நம்புகின்றன. முன்பதிவிலேயே, தடுக்கப்பட்ட இருக்கைகள் (Blocked Seats) உட்பட ரூ.22.26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
