ஜனநாயகன் வசூல்: ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் இன்று ரிலீஸாகி அவர் ரசிகர்களை சந்தோஷப்பட வைத்திருக்கிறது. எங்களுக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. ஜனநாயகன் வேற லெவலில் உள்ளது. விஜய்ணா படம் நிச்சயம் ரூ. 1,000 கோடி அடிக்கும் என்று தளபதி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பெருமையாக பேசி வருகிறார்கள்.
சினிமா, அரசியல்: ஜனநாயகன் ரிலீஸ் நாளில் இயக்குநர் வினோத் மக்கள் குறித்து தெரிவித்த கருத்து பலரையும் கவர்ந்திருக்கிறது. பேட்டியில் ரங்கராஜ் பாண்டே சில வார்த்தைகளை சொல்ல அதை கேட்டதும் மனதில் படும் விஷயத்தை தெரிவித்திருக்கிறார் வினோத். வெற்றி என கேட்டதும் கவனம் என யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்தார். விமர்சனம் என கேட்டதும் தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். சினிமா என்றால் தொழில் என கூறினார். அரசியல் என்றதும் சிரித்துவிட்டு தேவையான, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என தெரிவித்தார் வினோத்.
மக்கள் அன்பானவர்கள்: துரோகம் என்றதும் வினோத்தின் முகம் மாறியது. லேசா ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அமைதியாகிவிட்டார். துரோகத்தை எதிர்கொள்வது கஷ்டமாக இருக்கும். ஆனால் அது ஒரு அனுபவம் கொடுக்கும் என கூறினார். புரட்சிக்கு தனக்கு பதில் தெரியவில்லை என்றார். மக்கள் என கேட்டதும், என்னை பொறுத்த வரை அன்பானவர்கள். ஏனென்றால் தவறு செய்தால் கூட பய பாவம் என பலரை மன்னித்துவிடுகிறார்கள்.
மக்களிடம் எனக்கு ஆச்சரியமளுக்கும் விஷயம் என்னவென்றால் ஒருவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கும். அவர் மேடையில் ஏறி நான் கஷ்டப்படுகிறேன் என பேசுவார். அதை கேட்டு மக்கள் எமோஷனலாகி அவன் பாவம் என்பார்கள். அது ரொம்ப சர்பிரைஸிங்காக இருக்கும். மக்களிடம் பெரும் கருணை இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் பெரும் கருணை அவர்களை ஆட்சி செய்பவர்களிடமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். எதிர்காலம் என சொன்னதுமே கொஞ்சமும் யோசிக்காமல் ரொம்ப பிரைட்டாக இருக்கிறது என பதில் கொடுத்தார். நம்ம நாட்டிற்கும், உலகிற்கும் பிரைட்டாக உள்ளது. அறிவியல் வளர்ச்சியால் எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்றார்.
துரோகம் என்கிற வார்த்தையை கேட்டதும் வினோத் ஏன் அப்படி ரியாக்ட் செய்தார்?. அவருக்கு துரோகம் செய்தவர் யார் என மக்கள் கேட்கிறார்கள். அது மட்டும் அல்ல வினோத் ரொம்ப தைரியமானவராக இருக்கிறார். பாயிண்ட் பாயிண்டாக எடுத்து வைக்கிறார். அவரின் பேட்டிகளை கவனமாக பார்த்தால் நிறைய விஷயம் புரிகிறது என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திக்க வேண்டாமே: விஜய்ணா முதல்வரான பிறகு அவரை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் வெளியிடுகிறார்கள். ஆனால் வினோத்தை இன்னும் காணவில்லையே என்று பேசப்பட்டது. இந்நிலையில் நான் ஏன் முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் செல்லவில்லை என தெரிவித்துள்ளார். வினோத் கூறியதாவது, அவர் முதல்வரான பிறகு படம் தொடர்பாக ஒரு இடத்தில் பார்த்தேன்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அஜித் குமார் சார் அம்மா இறந்தபோது நான் அவர் வீட்டிற்கு சென்றேன். அங்கு விஜய் சாரும் இருந்தார். அப்பொழுது அவரை பார்த்தேன். தலைமைச் செயலகத்திற்கு சென்று அவரை பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன். நல்ல விஷயம் செய்ய அவர் பதவிக்கு வந்திருக்கிறார். அவருக்கு 8 மணிநேரமே போதாது. 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும் நேரத்தில் நாம் போய் அவரை சந்தித்து 10 நிமிடம் வேஸ்ட் செய்யக் கூடாது என நினைக்கிறேன். அவர் மீது அன்பு இருக்கிறது என்பதை காட்ட வேண்டுமெனில் நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் செய்தால் போதும். அவரை பார்த்து நேரத்தை வீணடித்து, தொல்லை செய்யாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Source link
