நியூயார்க் சிறையில் கத்திகள், செல்போன் வீசிய மர்ம ட்ரோன்

இதைப் பார்த்த சிறை அதி​காரி​கள் செல்​போன், ஹேர்​கிளிப்​பு​கள் அடங்​கிய பையை எடுத்து சோதனை செய்​தனர். இதில் 8 அங்​குலம் கொண்ட கத்​தி​கள், செல்​போன் ஆகியவை பச்சை நிற இலை​யால் சுற்​றப்​பட்டு இருந்​தது. மேலும், போதை ரசாயனங்​களால் ஊறிய 5 காகிதத் துண்​டு​களை, இரண்டு முடி வெட்​டும் கருவி​களான ஹேர்​கிளிப்​பர்​ஸ், சார்​ஜர்​கள் ஆகிய​வை​யும் இருந்​தன.

இந்​தப் பொருட்​களை சுமந்து வந்த மர்ம ட்ரோன், சிறைக்கு வெளியே கீழே விழுந்​திருந்​தது. இந்த சம்​பவத்​தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

சிறை​யில் இருக்​கும் கைதி​களுக்கு போதைப் பொருட்​களை சமூக விரோ​தி​கள் ட்ரோன்​கள் மூலம் சப்ளை செய்​வது பரவலாக உள்​ளது. அவ்​வாறு இதை யாராவது வீசி​யிருக்​கலாம் என்று மார்சி சிறைத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதுதொடர்​பாக சிறை அதி​காரி​களை வி​சா​ரணை​யைத்​ தொடங்​கியுள்​ளனர்​.

Source link