சென்னை: தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

சென்னை: தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், வி.சி., கட்சி ஆறு தொகுதிகளை பெற்று, தனிச்சின்னத்தில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

எனவே, இந்த சட்டசபை தேர்தலில், ஒரு லோக்சபா தொகுதிக்கு ஆறு சட்டசபை தொகு திகள் என்ற அடிப்படையில், 12 தொகுதிகளை ஒதுக்குமாறு தி.மு.க., தலைமையிடம் வி.சி., கேட்டது. ஆனால், கடந்த தேர்தலை போல ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தி.மு.க., முன்வந்தது. அதை வி.சி., ஏற்கவில்லை.

அதன்பின், தமிழகத்தில் எட்டு, புதுச்சேரியில் இரண்டு என, 10 தொகுதிகள் ஒதுக்குமாறு வி.சி., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பெறும் தொகுதிகள் அனைத்திலும், தங்களது ‘பானை’ சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனவும் கூறியது. இந்த நிபந்தனையை தி.மு.க., தரப்பில் ஏற்கவில்லை.

இப்படியான சூழலில் தான், முதல்வர் ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு முதல்வரிடம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link