மகளையும் மக்களையும் காப்பாற்றும் போராட்டத்தில் வெற்றிபெற்றாரா?

இன்று தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’ பகவந்த் கேசரி தெலுங்கு படத்தின் ரீமேக். அதுவும் தேர்தலுக்கு முன்பே விஜய் இதுதான் கடைசி படம் என அறிவித்தது என இந்தத் திரைப்படத்திற்கு எக்கச்சக்கை எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எகிறிய நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ஜனநாயகன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா?

கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் விஜய் அங்கு ஜெயிலராக இருக்கும் கௌதம் மேனன் கடைக்கண் பார்வையால் விடுதலை ஆகிறார். கௌதம் மேனன் மகள் மமிதா பைஜு சிறு வயது முதலே ஜெயிலில் விஜயுடன் வளர்கிறார். இதனால் அவர்களுக்குள் ஒரு பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. வெளியே வந்த பிறகும் இந்த பாசப்பிணைப்பு தொடர அந்த நேரம் பார்த்து ஒரு விபத்து ஏற்பட்டு கௌதம் மேனன் இறக்கும் தருவாயில் தன் மகளை எப்படியாவது ராணுவத்தில் சேர்த்து விட வேண்டும் என விஜய்யிடம் கூறிவிட்டு இறந்து விடுகிறார். இதனால் விஜய் மமிதா பைஜூவை தன் மகள் போல் பாவித்து பாசம் காட்டி நேசம் காட்டி வளர்க்கிறார்.

மமிதா பைஜூகோ ஃபியர் போபியா எனனும் பயம் நோய் இருக்கிறது. இதனால் அவர் ராணுவத்தில் சேர சிக்கல் ஏற்படுகிறது. இருந்தும் இதையெல்லாம் சரி செய்து அவரை எப்படியாவது ராணுவத்தில் சேர்க்க விஜய் முயற்சி செய்ய அந்த நேரத்தில் வில்லன் சன்னி தியோல் விரிக்கும் வலையில் மமிதா பைஜூ சிக்க அந்தப் பிரச்சனையில் விஜய்யும் சம்பந்தப்பட இவர்கள் மூவரும் ஒரு பிரச்சனையில் இணைகின்றனர். அது என்ன பிரச்சனை? அந்தப் பிரச்சனையில் இருந்து மகளையும் மக்களையும் விஜய் காப்பாற்றினாரா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதிலிருந்து சில காட்சிகளை சேர்த்துக்கொண்டு தன் பாணியில் சிறப்பான முறையில் மாஸ் மசாலா கலந்த அதிரடியான கமர்சியல் படமாக இப்படத்தை உருவாக்கி மாஸ் காட்டி இருக்கிறார் இயக்குநர் எச் வினோத். குறிப்பாக இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் அதற்கு ஏற்றார் போல் மாஸ் மசாலா கமர்சியல் அம்சங்களோடு சேர்த்து டிவிகே-விற்காக பிரச்சார பீரங்கிகளையும் ஆங்காங்கே வெடிக்க வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அதே போல் விஜய்யின் டிரேட் மார்க் நடனங்களையும் மாஸ் மசாலா பஞ்சுகளையும் படம் நெடுக படர செய்து அனைவருக்கும் ஒரு மாஸ் விருந்து கொடுத்து படத்தையும் வெற்றி பெற செய்திருக்கிறார்.

460

அக்மார்க் விஜய் படத்திற்கான அத்தனை அம்சங்களும் இந்த திரைப்படத்தில் படம் முழுவதும் இருப்பது தியேட்டரில் விசில் சத்தத்தை மற்றும் கைத்தட்டளை கொடுத்து அதிர செய்கிறது. பெரியோர் முதல் சிறியோர் வரை படத்தை கொண்டாடித் தீற்கின்றனர். அந்த அளவு சென்டிமென்ட்டோடு இந்த படத்தை காண அலைய அலையாக செல்கின்றனர். அதற்கேற்றார் போல் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தியே இந்த படம் அனுப்புகிறது. 

படத்தின் முதல் பாதி விஜய்-க்காண அக்மார்க் படமாக நகர்ந்து இரண்டாம் பாதியில் கதைக்குள் செல்லும் சென்று மாஸ் கமர்சியல் மற்றும் பிரச்சார காட்சிகளோடு சேர்த்து ஒரு மாஸ் ஹிட் படமாக மாறுகிறது. இருப்பினும் ஆங்காங்கே தென்படும் லாஜிக் மிஸ்டேக்குகள், அயற்சி தரும்படியான காட்சிகள், படத்தின் நீளம் ஆகியவை நம்மை சோதிக்கிறது. அது பல இடங்களில் நம்மை நெருட செய்கிறது. குறிப்பாக பல பில்டப் காட்சிகள் வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மறக்கடிக்கும் படி விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் சிறப்பாக அமைந்து இந்த படத்தை கரை சேர்த்திருக்கிறது. 

459

விஜய் வழக்கம் போல் தனக்கு என்ன வருமோ அதே வழக்கமான கமர்சியல் பார்முலாவையே இந்த படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார். ஆனாலும் இது கடைசி படம் என்பதால் தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் இப்படத்தில் இறக்கி தன் ரசிகர்களுக்கு ஃபுல் சேட்டிஸ்ஃபேக்ஷன் கொடுக்கிறார். இந்த கால இளைஞர்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் குடும்பங்களுக்கும் என்ன தேவையோ அதை சிறப்பான முறையில் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி படம் முழுவதையும் தன் தோள் மேல் சுமந்து தூக்கி நிறுத்தி இருக்கிறார். சம்பிரதாய நாயகியாக வரும் பூஜா ஹெக்டே வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். விஜயின் மகளாக வரும் மமிதா பைஜூ அழகான நடிப்பு வழக்கம்போல் க்யூட்டான அதேசமயம் ஆக்சன் கலந்த கதாபாத்திரத்தில் கொஞ்சம் வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். படத்துக்கு படம் இவரது நடிப்பு மெருகேறிக்கொண்டே செல்கிறது. இதனாலேயே இவர் அதிக கவனம் பெறுகிறார். 

வழக்கமான வில்லனாக வரும் பாபி தியோல் வெறித்தனமான மற்றும் மிருகத்தனமான வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார். வழக்கமான வில்லத்தனம் தான் என்றாலும் படத்திற்கு ஏற்றார் போல் அது இருப்பது சற்று ஆறுதல். அரசியல்வாதியாக வரும் பிரகாஷ்ராஜ் நக்கல் நையாண்டி என வித்தியாசமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார். சிறிய பாத்திரமாக இருந்தாலும் அழகாக வந்து செல்கிறார் கௌதம் மேனன். விஜய்யின் அம்மாவாக வரும் ரேவதிக்கு அதிக வேலை இல்லை. விஞ்ஞானியாக வரும் நரேன் மற்றும் ஐபிஎஸ் ஆக வரும் பிரியாமணி ஆகியோரும் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ரேச்சல், முத்துக்குமார் உட்பட படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர பட்டாளமுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர். குறிப்பாக அட்லி, நெல்சன், லோகேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி சர்ப்ரை செய்திருக்கின்றனர். 

462

வழக்கம்போல் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பக்கா வைப் ரகம். படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே தியேட்டரை கலங்கடித்துள்ளன. அதேபோல் பின்னணி இசையும் ஒரு மாஸ் கமர்சியல் படத்திற்கு ஏற்றாற்போல் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் தன் அனைத்து வித்தைகளையும் இசை மூலம் இறக்கி விட்டு ஆட்டம் போட வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் தனக்கு கொடுத்த வேலையை மிக மிக சிறப்பாக செய்து படத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. குறிப்பாக ஆக்சன் காட்சிகள் மற்றும் ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனல் அரசின் ஆக்ஷனும் கூடுதல் சிறப்பு. 

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் உருவாகி இருக்கும் திரைப்படம் என்பதால் அவரின் ஸ்டைலில் ஆக்சன் கமர்சியல் மாஸ் என அனைத்தும் கலந்தபடியான ஒரு திரைப்படமாகவும், அதே சமயம் அரசியல் பிரச்சாரத்திற்கு ஏற்றார் போல் டிவிகே-விற்கு ஆதரவான அஜண்டா கொண்ட திரைப்படமாகவும் ஒருசேர உருவாகி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் படியான கமர்சியல் படமாகவும் இந்த திரைப்படம் அமைந்து தியேட்டரில் திருவிழாவை உண்டாக்கி இருக்கிறது.

ஜனநாயகன் – ரசிகர்களுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு!

Source link