தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்; டெல்லி காவல் ஆணையருக்கு கூடுதல் அதிகாரம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் போராட்டக்காரர்கள் கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்ற போது அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தனால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களை துணை ராணுவப்படைகளை வைத்து கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலுக்கு நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே,  போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லி காவல் ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையம் சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பொது அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும் பொருட்டு துணைநிலை ஆளுநர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி காவல் ஆணையருக்கும் இந்த கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதன் மூலம், குற்றச்சாட்டுகள் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த அதிகாரம் ஜூலை 19ஆம் தேதி அக்டோபர் 18 வரையிலான மூன்று மாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

Source link