நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்; திரையுலகினர் பங்கேற்பு!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் ஜனதா கட்சியின் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்கும் நோக்கில் காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, தடியடி தாக்குதல், குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

இந்த சூழலில் டெல்லியில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைத்துறையினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், லெனின் பாரது உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இவர்களோடு நடிகை ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டார்.

Source link