நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata Party – CJP), ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா விடுத்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை அழைப்பை அதிரடியாக நிராகரித்துள்ளது.
“மக்களின் மன்றம் ஜந்தர் மந்தரில்தான் இருக்கிறது, ரகசிய அறைகளில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை” என சிஜேபி தலைமைப் பொதுச்செயலாளர் சவுரவ் தாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஜே.பி.நட்டா இல்ல அழைப்பும், சிஜேபியின் அதிரடி மறுப்பும்
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது தடியடி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதற்றத்தைத் தணிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய சுகாதார அமைச்சரும் ஜே.பி. நட்டா, சிஜேபி மற்றும் மாணவர் பிரதிநிதிகளைத் தனது இல்லத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த அழைப்பைக் நிராகரித்த போராட்டக்காரர்கள், அதிகாரிகளின் வீடுகளுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ சென்று மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசுவதை ஏற்க முடியாது என மறுத்துவிட்டனர்.
ஜந்தர் மந்தர் அல்லது நடுநிலையான பொது இடம்
அரசாங்கத்துடனான அடுத்தகட்ட விவாதங்களுக்குப் பின்வரும் முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை என்பது பொதுமக்கள் மத்தியில் அல்லது போராட்டக்களமாக விளங்கும் ஜந்தர் மந்தரில் மட்டுமே நடக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களால் அமைச்சர்கள் அங்கு வரத் தயங்கினால், இரு தரப்புக்கும் பொதுவான ஒரு நடுநிலை இடத்தில் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும்.
முந்தைய பேச்சுவார்த்தைகளில் அரசுத் தரப்பில் எந்தவொரு உறுதியான முடிவும் எடுக்கப்படாததால், இந்த முறை வெற்று வார்த்தைகளை ஏற்கத் தயாராக இல்லை என்றும், எழுத்துப்பூர்வமான உறுதியான வாக்குறுதிகள் மட்டுமே தேவை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
சிஜேபியின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?
நீட் முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சிஜேபி மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோர் இணைந்து இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இவர்களின் முதன்மை கோரிக்கைகளாக இருப்பவை
நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். தேர்வு முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் போராட்டம்
மக்களின் மன்றம் இங்கிருக்கிறது!’ – ஜே.பி.நட்டாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!ஒருபுறம் டெல்லி வீதிகளில் 144 தடை உத்தரவையும் மீறி மாணவர்கள் போராடி வரும் நிலையில், மறுபுறம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. இதனால், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு போன்ற தீவிரமான பிரச்சனைகளை அரசு திசைதிருப்பக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அரசுப் தரப்பிலிருந்து உறுதியான உத்திரவாதம் கிடைக்கும் வரை அல்லது பொதுவெளியில் முறையான பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் வரை தங்களது அறப்போராட்டம் ஓயாது என அபிஜித் தீப்கே மற்றும் சவுரவ் தாஸ் தலைமைப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
Source link
