இந்த சூழலில் போராட்டக்காரர்கள் கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்ற போது அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தனால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களை துணை ராணுவப்படைகளை வைத்து கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலுக்கு நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் போராடும் கரப்பான்பூச்சி கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தை விரிவுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர். நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் பரவி வரும் நிலையில், நாளை (23-07-26) மாவட்டந்தோறும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளனர்.
