'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் பெயரை மாற்ற த.வெ.க., அரசு முடிவு

நமது நிருபர்

கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் பெயரை மாற்ற த.வெ.க., அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 1999ல் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை துவக்கினார். 2021ல் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டது. 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் 5654 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ‛வருமுன் காப்போம்’ திட்டம் ‛நலம் காக்கும் ஸ்டாலின்’ என பெயர் மாற்றப்பட்டு 1256 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

புதிதாக அமைந்த த.வெ.க., அரசு, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை, வழங்கப்பட்ட சிகிச்சைகள், பரிசோதனைகள் குறித்த தரவுகளை சேகரித்தது.தொடர்ந்து இத்திட்டத்தின் பெயரை மாற்றி செயல்படுத்தவும் த.வெ.க., அரசு திட்டமிடுகிறது. காலை உணவு திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை வைத்தது போல, த.வெ.க., கொள்கை தலைவர்களில் ஒருவரின் பெயரை இத்திட்டத்திற்கு வைக்கவும் முடிவு செய்துள்ளது.

Source link