நாணயத்தில் மாற்றம்; இந்தியாவுடன் நட்பைப் பலப்படுத்துகிறதா?

நமது அண்டை நாடான நேபாளம், நமக்கு நட்பு நாடாக விளங்கிய போதிலும், எல்லை விவகாரங்களில் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக, நம் நாட்டில் உள்ள லிபுலேக், காலா பானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளைச் சொந்தம் கொண்டாடி வருகின்றது. 

மேலும், அந்தப் பகுதிகளுடன் கூடிய தேசிய வரைபடத்தையும், அந்த நாடு 2020 ஆண்டு வெளியிட்டது. அதே போல, அந்த வரைபடத்துடன் கூடிய நாணயங்களையும் வெளியிட்டது.  

இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்த சர்ச்சைக்குரிய அந்த படத்தை நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ’லோ க்யாகர்’ மடாலயத்தின் படத்தைச் சேர்த்துள்ளது.  இந்த புதிய வடிவமைப்பு கொண்ட நாணயங்களை அச்சடிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த காலங்களில் நேபாள அரசு எல்லை விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தது. இந்நிலையில், இந்த செயல்பாடு இந்தியாவுடனான நட்பைப் பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ள ஒரு முன்முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரண்டு ரூபாய் நாணயத்தில் அந்த படம் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link