கொளத்தூருக்கு விஜய் போட்ட புது ஸ்கெட்ச்.. ஸ்டாலின் இனி அங்கு நிற்கவே கூடாது – பின்னணியில் பக்கா பிளான் – cm vijay kolathur development meeting discuss with mla sv babu

முதல்வர் விஜய்  கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.வி. பாபுவை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழக அரசியலில் கொளத்தூர் தொகுதி எப்போதுமே ஒரு தனித்துவமான கவனிப்பைப் பெற்றது. அங்குதான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டது. திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு, மிகக் கடுமையான போட்டிகளுக்கு இடையே வெற்றி பெற்று அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார்.

கொளத்தீர்ல் மு.க.ஸ்டாலின் தோல்வி

இருப்பினும், தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த விதம், அங்கிருந்த மக்களிடையே ஒருவித அனுதாப அலையை உருவாக்கியது. இதை தவெக தலைமையோ அல்லது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தவெகவுக்கு உள்ள செல்வாக்கை வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படியே தக்கவைத்துக்கொள்ள விஜய் மிகத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார்.

1,013 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகள்

குறிப்பாக, வடசென்னையை மையமாகக் கொண்டு பெரிய திட்டங்களைக் கொண்டுவருவதன் மூலம் மக்களின் ஆதரவை நிரந்தரமாக்க முடியும் என்பது அவரது அரசியல் கணிப்பாக இருக்கிறது.இதன் ஒரு பகுதியாகத்தான், பெரம்பூர் தொகுதியில் சுமார் 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்போது கொளத்தூர் தொகுதியும் விஜய்யின் பார்வைக்கு வந்துள்ளது.

எஸ்.வி. சேகருடன் ஆலோசனை

சமீபத்தில் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவை தனியாக வரவழைத்த விஜய், தொகுதியில் நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசுகையில், கொளத்தூரும் என்னோட சொந்தத் தொகுதி மாதிரிதான். அங்க மக்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்கள் செய்யணுமோ, எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி கொண்டு வாங்க என்று பாபுவிடம் கூறியதாகத் தெரிகிறது.

மிகப்பெரிய அரசியல் வியூகம்

இந்த திடீர் சந்திப்புக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒளிந்திருக்கிறது. கொளத்தூரில் ஸ்டாலினுக்கு இருக்கும் அனுதாப அலையை அப்படியே உடைக்க வேண்டும் என்பது முதல் இலக்கு. அதைவிட முக்கியமாக, ஸ்டாலினை விடவும் தவெக ஆட்சிதான் கொளத்தூருக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது என்ற பிம்பத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க விஜய் விரும்புகிறார்.
வருகிற தேர்தல்களில் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுவதை யோசிக்கும் அளவுக்கு சூழலை உருவாக்க வேண்டும் என்பதும், திமுகவின் முக்கிய தலைவர்களைச் சென்னையை விட்டு வேறு மாவட்டங்களுக்கு மாற வைப்பதும் தான் விஜய்யின் இந்த நகர்வுக்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Source link