ஒரே குடையில் வருகிறது நெடுஞ்சாலைத்துறை: அரசாணையால் அலறும் ஊழியர்கள்

மதுரை: தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, திட்டங்கள், பாலங்கள், தரக்கட்டுப்பாடு, தேசிய நெடுஞ்சாலை, கிராமச்சாலைகள் (நபார்டு) மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் உள்ளன. இவை எல்லாமே மாநில அளவில் ஒரே ஒரு தலைமைப் பொறியாளரின் கீழ் செயல்படுகின்றன.

இத்துறைகளில் 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள், 8 ஆயிரம் பிற ஊழியர்கள், அலுவலர்கள் என பெரிய துறையாக செயல்படுகிறது. நெடுஞ்சாலைத் துறைகள் அனைத்தையும் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒரே பிரிவுக்குள் கொண்டு வர உள்ளதாக மார்ச் 13ல் அரசாணை வெளியிடப்பட்டது. தரக்கட்டுப்பாடு, ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் ஒருங்கிணைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக எந்த அறிகுறியையும் காட்டாமல், ஆட்சி முடியும் தருவாயில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு செயலாக்கம் பெறும்போது, சென்னை தலைமை பொறியாளர் போன்று, மதுரை, கோவை, திருச்சியிலும் தலைமை பொறியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் சென்னை தலைமைப் பொறியாளரின் அதிகார வலிமை குறையும். அதேபோல எல்லா மாவட்டங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் பலர் இடமாற்றத்திற்கு ஆளாவர். இதனால் ஊழியர்கள் குமுறலில் உள்ளனர்.

Source link