சிங்கப்பூர்: நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் 200 மீ., ‘பட்டர்பிளே’ பிரிவில் இந்தியாவின் ஆஸ்தா 2வது இடம் பிடித்தார்.
சிங்கப்பூரில், நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளே’ பிரிவில், இந்தியாவின் ஆஸ்தா சவுத்ரி பங்கேற்றார். தகுதிச் சுற்றில் இலக்கை 2 நிமிடம், 18.37 வினாடியில் கடந்த இவர், பைனலுக்கு தகுதி பெற்றார்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஆஸ்தா, இலக்கை 2 நிமிடம், 17.09 வினாடியில் கடந்து 2வது இடத்தை கைப்பற்றினார். இத்தொடரின் 200 மீ., ‘பட்டர்பிளே’ பிரிவில் பந்தய துாரத்தை அதிவேகமாக கடந்த இந்தியரானார் ஆஸ்தா. இதற்கு முன், 2022ல் இந்தியாவின் அபேக் ஷா, 2 நிமிடம், 18.18 வினாடியில் கடந்தது சிறந்த செயல்பாடாக இருந்தது.
முதலிடத்தை, ஜப்பானின் மட்சூரா யூ (2 நிமிடம், 15.91 வினாடி) தட்டிச் சென்றார்.
