அறநிலையத்துறைக்கு கூடுதலாக 2 அதிகாரிகளை நியமிக்க முடிவு

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையின், சென்னை, திருச்சி மண்டலங்களுக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, கூடுதல் கமிஷனர்களாக நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, வெளியிடப்பட்ட அரசாணை விபரம்:

ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனரின் பரிந்துரையை ஏற்று, 1959ம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, துறையின் சென்னை, திருச்சி மண்டலங்களுக்கு, தலா ஒரு கூடுதல் கமிஷனர்களை நியமிக்க உத்தரவிடப்படுகிறது. இப்பொறுப்பில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை கூடுதல் கமிஷனர், வடக்கு மண்டலப் பொறுப்பாளராகவும், திருச்சி கூடுதல் கமிஷனர், தெற்கு மண்டல பொறுப்பாளராகவும் செயல்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link