தமிழக அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் .. தலித் மக்களுக்கு எந்த பயனும் இல்லை – பா.ரஞ்சித் கடும் விமர்சனம்! – pa. ranjith’s scathing criticism having eight dalit ministers in the tamil nadu cabinet

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்கு ஆதரவாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அதே இடத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதை முன்னிட்டு, ஜந்தர் மந்தரில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்த முயன்றதாக கூறி காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

ஒரு கட்டத்தில் நிலைமை பதற்றமாக மாறியதால், போராட்டத்தை கலைக்க காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கை எடுத்தனர். அப்போது பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டெல்லியில் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து டெல்லியில் மாணவர்கள் தங்களுடைய போராட்டைத்தை நிறுத்தாமல் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இந்த சூழலில் டெல்லியில் போராடும் மாணவர்களாக மாநிலம் முழுவதிலும் இருக்க கூடிய மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு, நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டு பேசுகையில், தமிழகத்தின் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. தற்பொழுது அமைச்சரவையில் எட்டு தலித் அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்த தனி அமைச்சர்கள் எட்டு பேர் என்றைக்கு தலித் பிரச்சினைகளை பேசி இருக்கிறார்கள். குறிப்பாக வன்னியரசை தவிர மீதமுள்ள ஏழு தள்ளி தமச்சரவை என்றைக்காவது தலி பிரச்சினைகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? அமைச்சர் ராஜ்மோகன் தலித்தா? இல்லையா ?என்பது அவர் தேர்தலை நிற்கும் பொழுது தான் எங்களுக்கு தெரியும்.

ஒரு அமைச்சராகவும் ஒரு youtube ஒரு நடிகராகவும் இருந்தாக எந்த ஒரு தலித் பிரச்சினைக்கும் இதுவரை அவர் குரல் கொடுத்ததே.. ஆனால் தற்பொழுது நடந்துள்ளது மாற்றம் கிடையாது. வன்னியரசு போன்ற தலைவர்களுக்கு அதிகாரம் கிடைத்தவுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் அதனை பாராட்டுகிறோம். நேரடியாகவே வன்னிய அரசுக்கும் எனக்கும் நிறைய உறவுகள் இருக்கிறது. அமைச்சராக வன்னி அரசு பதவி ஏற்ற பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பார்த்து வியந்தேன்.

சேலம் மாவட்டத்தில் கால்மேல் கால்போட்ட இருக்கக்கூடிய அம்பேத்கர் சிலையை ஏன் திறக்க முடியவில்லை? 15 பேரை அடித்து சிறையில் அடைத்துள்ளன அதுவும் கொலை வழக்கு. இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. உங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் அரசு விழாக்களில் அம்பேத்கர் சிலையை திறங்கள். அம்பேத்கர் உங்களுடைய கொள்கை தலைவர் தானே?? சட்டமேதை அம்பேத்கர் உங்கள் கொள்கை தலைவர் சிலையை திறந்து வைப்பது என்ன குற்றம் அவரை ஒரு சாதிய தலைவராக சிலர் முன்னிறுத்துகிறார்கள் என்று கூறினார்.

Source link