நமது நிருபர்மேற்காசிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய

நமது நிருபர்

மேற்காசிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளதுடன், தன் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக ஈரானுக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மேற்காசியாவில்
நடந்து வரும் போர் காரணமாக ஈரானின், ‘சவுத் பார்ஸ்’ இயற்கை எரிவாயு தளம்
மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் குறித்து
அமெரிக்காவுக்கு முன்பே தெரியாது.

கத்தார் ஒரு அப்பாவி நாடு. அதன்
மீது ஈரான் தேவையற்ற முறையில் தாக்குதல் நடத்துவது முறையல்ல. இனி இஸ்ரேல்
ஈரானை தாக்காது. ஆனால், ஈரான் மீண்டும் கத்தார் மீது கை வைத்தால், ஈரானின்
ஒட்டுமொத்த எரிவாயு தளங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link