நேபாள எல்லை வழியாக ஊடுருவ முயற்சி; அமெரிக்க குடியுரிமை பெற்றவர் உள்பட 2 பேர் கைது

லக்னோ: அமெரிக்க குடியுரிமை பெற்றவருடன் இணைந்து நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற, தேடப்பட்டு வரும் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது; உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் எஸ்பி விஸ்வஜித் ஸ்ரீவஸ்தவா அளித்த தகவலின்படி, ரூபைடிஹா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இந்திய-நேபாள சர்வதேச எல்லையில் சசாஸ்திர சீமா பல் மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.

அப்போது, நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சாபில் தேடப்பட்டு வந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் முக்கிய உறுப்பினரும், போலீசால் தேடப்பட்டு வருபவருமான விக்ரம்ஜித் சிங் மற்றும் பஞ்சாபின் மோகா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கக் குடியுரிமை பெற்ற மன்வீர் சிங் தில்லான் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link