ஈரான் தாக்குதலால் மத்திய கிழக்கு பதற்றத்தில் உள்ளது. இதனிடையே
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடிக்கடி பயணம் செய்யும் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள், தொழிலதிபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆஃபரை அமீரகம் அறிவித்துள்ளது. அதாவது, தற்போது ‘5 ஆண்டு மல்டிபிள் என்ட்ரி சுற்றுலா விசாவை’ (5-Year Multiple Entry Tourist Visa) அமீரக அரசு வழங்குகிறது.
என்ன சிம்ரன் இதெல்லாம்? 6 -வது மாடியில ட்ரெயின் ஸ்டேஷன்; இடம் இல்லனு சீனாக்காரன் என்ன பண்ணி வச்சிருக்கான் பாருங்க
இந்த விசாவின் மிக முக்கியச் சிறப்பம்சமே, இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எந்தவொரு ஸ்பான்சரும் தேவையில்லை என்பதுதான். பயணிகள் தங்களின் சொந்தப் பொறுப்பிலேயே நேரடியாக இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த 5 ஆண்டு விசாவின் முக்கிய அம்சங்கள்
நீண்ட கால செல்லுபடி: இந்த விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
பலமுறை பயணம் (Multiple Entry): இந்த 5 ஆண்டுகளில் பயணிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் சென்று வரலாம்.
தங்கும் காலம்: ஒருமுறை அமீரகத்திற்குச் சென்றால் தொடர்ந்து 90 நாட்கள் வரை தங்க முடியும்.
நீட்டிப்பு வசதி: சிறப்புச் சூழல்களில், ஒரு ஆண்டிற்கு மொத்தமாகத் தங்கும் காலத்தை 180 நாட்கள் வரை நீட்டித்துக் கொள்ள அனுமதி உண்டு.
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்கள்
- இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கு முந்தைய 6 மாதங்களில் குறைந்தபட்சம் 4,000 அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் ரூ.3.30 லட்சத்திற்கும் மேல் அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுச் செலாவணி வங்கிக் கணக்கில் இருப்பு இருக்க வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வ வங்கி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
- பாஸ்போர்ட் அளவிலான வெள்ளை நிற பின்னணி கொண்ட புகைப்படம்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்லுபடியாகும் மருத்துவ காப்பீடு அவசியம்.
- திரும்பும் விமான டிக்கெட் மற்றும் தங்குமிடத்திற்கான ஆதாரங்கள் அவசியம்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் அமீரக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான ICP (Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security) அல்லது துபாய்க்கான GDRFA (General Directorate of Residency and Foreigners Affairs) தளங்கள் மூலம் ஆன்லைனிலேயே சுலபமாக விண்ணப்பிக்கலாம். அடிக்கடி அமீரகம் செல்லும் தொழிலதிபர்கள், அங்குள்ள உறவினர்களைக் காணச் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா விரும்பிகளுக்கு இந்த விசா நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் சிறந்த வாய்ப்பாகும்.
