பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நூதன போராட்டம்!

சென்னை சிவானந்த சாலையில், 2024-ஆம் ஆண்டு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நடத்தும் உரிமை மீட்பு உண்ணாவிரத கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதில், 13 ஆண்டுகளாக காத்திருக்கும் 2024-ஆம் ஆண்டு ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் மறு நியமன தேர்வின்றி உடனடியாக பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்.

2014 முதல் 2025 வரை உள்ள காலி பணியிடங்கள் 15 வருடமாக நிரப்பப்படாமல் உள்ள வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, இரு கைகளையும் வெள்ளை ரிப்பன்களால் கட்டிக்கொண்டு, கண்களை சிவப்பு ரிப்பன்களால் கட்டிக்கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Source link