ஆர்லியன்ஸ்: பிரான்ஸ் நாட்டில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா, சகநாட்டைச் சேர்ந்த அன்மோல் ஹார்புடன் மோதினார். இதில் தன்வி சர்மா 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் இஷாராணி பருவா 21-11, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் 42-வது இடத்தில் உள்ள கனடாவின் வென் யு ஸாங்கை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் ஹம்சகருணன், அர்ஜூன் ஜோடி 26-24, 21-14 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர், ஆடம் பிரிங்கில் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிசுற்றுக்கு முன்னேறியது.
