மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிஸ் குமார், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக இன்று ஆஜரானர்.
அப்போது அவர், “பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரத் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு பதிவாளரைக் கொண்டு, பத்திரப் பதிவு செய்தது, உடனடியாக புகார் அளிக்காதது, நிலத்தின் மதிப்பை குறைவாக மதிப்பீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு விசாரிக்கப்பட வேண்டிய விசயங்கள் இந்த வழக்கில் உள்ளன. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், “கோரிக்கைகள் தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக” கூறினர். எனவே விரைவில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.