முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைக்கு வந்த முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ. 41 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் அந்த படம் ரிலீஸான கையோடு ஆன்லைனில் கசிந்து விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்று முதல் நாளே ரூ. 100 கோடி வசூல் வரவில்லை.
ஜனநாயகன் ஷோ
ஹெச். வினோத் இயக்கிய ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி படம் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். இதையடுத்து நேற்று வெளியான ஜனநாயகன் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் எல்லாம் தியேட்டர்களுக்கு சென்றார்கள். படம் முடியும் போது இனியும் விஜய்யை பார்க்க முடியாதே என பலர் அழுதிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அமைச்சர் பர்வேஸ் அழுதது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியிருக்கிறது.
ரூ. 41 கோடி வசூல்
ஜனநாயகன் படம் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் ரூ. 41 கோடியும், உலக அளவில் ரூ. 78 கோடியும் வசூல் செய்திருக்கிறது. ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு நடந்த வேகத்தை பார்த்த விஜய் ரசிகர்களோ முதல் நாளே ரூ. 100 கோடி வசூல் உறுதி என்றார்கள். ஆனால் தியேட்டர்களில் படம் பார்த்தவர்களோ கேசரியை கிண்டிவிட்டு அதில் மசாலாவை சேர்த்து கொடுத்திருக்கிறார்கள் என்று விமர்சித்தார்கள். நெகட்டிவ் விமர்சனங்களால் ஜனநாயகன் படத்தை வார இறுதியில் பார்க்க நினைத்தவர்கள் ஓடிடிக்கு வரட்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
2வது முறை லீக்
நெகட்டிவ் விமர்சனங்கள் போதாது என்று ஜனநாயகன் மீண்டும் ஒரு முறை ஆன்லைனில் லீக்காகிவிட்டது. படம் ரிலீஸாகும் முன்பே லீக்காகி அதை 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்த நிலையில் மீண்டும் கசிந்தது விஜய் ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. புதுப்படங்கள் திரைக்கு வந்து அது ஓடிடிக்கு வரும் முன்பு ஆன்லைனில் கசிவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இந்த கசிவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து திரையுலகை காப்பாற்றுவாரா முதல்வர் என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கேசரி, விஜய்
ஜனநாயகனுக்கு 13 ஆயிரத்து 67 ஷோக்கள் நடந்தது. விஜய்ணா படம் தமிழில் ரூ. 36.50 கோடியும், தெலுங்கில் ரூ. 2.75 கோடியும், இந்தியில் வெறும் ரூ. 1.75 கோடியும் வசூல் செய்திருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் விஜய் படம் அதுவும் கடைசி படம் வசூல் செய்யாதது ஏமாற்றம் அளித்திருக்கிறது. இது அனில் ரவிபுடி இயக்கிய பகவந்த் கேசரி தெலுங்கு பட ரீமேக் என்பது ரிலீஸுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது அங்கு வசூல் பாதிக்க காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாலய்யா மாஸ் அவருக்கு மட்டும் தான் கை கொடுக்கும். விஜய்க்கு அது செட்டாகவில்லை என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர் செய்த காரியம்
த்ரிஷா, கீர்த்தி
ஜனநாயகனை தியேட்டரில் பார்க்க நடிகர்கள், நடிகைகள் வந்திருந்தார்கள். த்ரிஷா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்கள். படம் பார்த்துவிட்டு கிளம்பிய த்ரிஷா அம்மா உமாவோ, இனி விஜய்யை படங்களில் மிஸ் பண்ணுவோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கிடையே திருத்தணியில் தியேட்டருக்கு போதிய ஆட்கள் வராததால் ஜனநாயகன் FDFS ரத்து செய்யப்பட்ட தகவல் வெளியாகி தீயாக பரவியது. தெலுங்கிலும், இந்தியிலும் ஜனநாயகனுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விட்டது.
