IND vs SL Test – இந்திய அணி அறிவிப்பு? 15 பேர் பட்டியல் இதோ: 2 சீனியர் வீரர்கள் அதிரடி கம்பேக் – indian team likely squad for sri lanka test series 2026

ஆகஸ்ட் மாதம், இலங்கை செல்லும் இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 15 முதல் 19ஆம் தேதி வரையும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியில், யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக கே.எல்.ராகுலும் இருப்பார்கள்.

பும்ரா, ஜடேஜா கம்பேக்: இந்திய டெஸ்ட் அணி, கடைசியாக கடந்த மாதம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடியது. அப்போது, ஜஸ்பரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெறாமல் இருந்தனர். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் பங்கேற்பது உறுதி எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பேட்டிங் வரிசை: டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில், கேப்டன் ஷுப்மன் கில், துணைக் கேப்டன் கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் இருப்பார்கள். கீப்பராக ரிஷப் பந்தும், பேக்கப் விக்கெட் கீப்பராக துரூவ் ஜோரல் ஆட உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள்: இலங்கையில், ஸ்பின்னர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால், நான்கு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி செல்ல உள்ளது. வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, மனவ் சுதார், ஹர்ஷ் துபே ஆகிய நான்கு ஆல்ரவுண்டர்கள் செல்ல உள்ளனர்.

பௌலர்கள் யார் யார்? ஜஸ்பரீத் பும்ரா முகமது சிராஜ் ஆகியோர் மெய்ண் பௌலர்களாக இருப்பார்கள். மேலும், குர்நூர் பிரார், குல்தீப் யாதவ் ஆகியோரும் முழுநேர பௌலர்களாக அணியில் இடம்பெற உள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி (உத்தேச பட்டியல்) – ஷுப்மன் கில் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), சாய் சுதர்ஷன், ரிஷப் பந்த். தேவ்தத் படிக்கல், துரூவ் ஜோரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பரீத் பும்ரா, மனவ் சுதார், குர்நூர் பிரார், ஹர்ஷ் துபே.

இரு அணிகளுக்கும் முக்கியமான தொடர்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 பைனலுக்கு முன்னேற வேண்டும் என்றால், இந்தியா, இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் இத்தொடரில் வெற்றிகளை பெற வேண்டும். இலங்கை அணி, 41.670 சதவீத புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், இந்திய அணி, 48.150 சதவீத புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் இருக்கிறது.

ஒருவேளை, இத்தொடரில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றால், இலங்கை அணிக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு, மிகவும் குறைந்துவிடும். இந்திய அணி 4ஆவது இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது. தற்போது, 4ஆவது இடத்தில் வங்கதேச அணி இருக்கிறது. இந்த அணி, 58.330 சதவீத புள்ளிகளுடன் இருக்கிறது.

ஆஸ்திரேலியா, (87.50), தென்னாப்பிரிக்கா (75.00), நியூசிலாந்து (72.22) ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link