ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

தஞ்சாவூர்: முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகா செல்கிறார் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

அவரது பேட்டி: ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்கிறார். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். மேதாது அணையை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அது நமது உரிமை. அதை விட்டு கொடுக்க மாட்டோம் என்று முதலில் இருந்தே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

அணையை கட்ட விடாமல் இருப்பதற்கு தான் ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வர் விஜய் செல்ல இருக்கிறார். கர்நாடகா தரப்பில் மழை பெய்யவில்லை; தண்ணீர் திறக்கவில்லை என்று சொல்கிறார்கள். இருந்தாலும் நமது உரிமைக்காக தமிழக முதல்வர் அதனை கேட்டு பெறுவார். இவ்வாறு அமைச்சர் வினோத் கூறினார்.

Source link