அடுத்த மெகா திட்டம் கடற்கரையில் தூய்மைப் பணி; தென் மாவட்டங்களில் துவங்கி வைக்கிறார் அண்ணாமலை

சென்னை: வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை துவங்கிய இருக்கும் அண்ணாமலை, ஒரு மாபெரும் கடற்கரை தூய்மைப் பணியைத் துவங்கி வைப்பதற்கு தென் கடலோர மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளார்.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் சார்பில், ஜூலை முழுவதும், போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை மூன்றாம் வாரத்தில், விழிப்புணர்வு பேரணி நடத்த, அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும், ‘வி தி லீடர்ஸ்’ சார்பில், மாராத்தான், நடைபயிற்சி, ஸ்கேட்டிங் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போதைப்பொருளுக்கு எதிராக, அண்ணாமலை ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் தனது முதல் மாநாட்டை நடத்தினார்.

தற்போது அடுத்தகட்டமாக கடற்கரையில் தூய்மைப் பணி திட்டத்திற்கு அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். ஒரு மாபெரும் கடற்கரை தூய்மைப் பணியைத் துவங்கி வைப்பதற்கு தென் கடலோர மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளார்.

ஆகஸ்ட் 2ம் தேதி கன்னியாகுமரிக்குச் சென்று, கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இருந்து இந்த மெகா திட்டத்தை அண்ணாமலை துவங்கி வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் உவரி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களிலும் இதேபோன்று தூய்மை பணியை துவங்கி வைக்கிறார் என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் தெரிவித்தனர்.

மாபெரும் தூய்மை இயக்கத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது பயணத்தின் போது உள்ளூர் மீனவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், குறிப்பாக மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூரில் உள்ள முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய மையங்களைப் பராமரித்தல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக பாரக்கப்படுகிறது.

குறிப்பாக அண்ணாமலை துவங்கி இருக்கும் வீ தி லீடர்ஸ் அமைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link