அழகான சிறுமி, ஆனா காதல் படத்தில் கலக்கிய நாயகன்; பெண் வேடத்தில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?

நடன உடையில் புன்னகைத்துக் கொண்டிருக்கும் இந்த அழகான குட்டீஸை உற்று நோக்கினால், அந்த புன்னகையிலிருந்தே அவர் யார் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்த இந்த நடிகர், ரஜினிகாந்த், சரத்குமார், நெப்போலியன், மாதவன் பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நடிகர் யார் என்று தெரிகிறதா?

அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் வினித் தான். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் “யாருக்காவது இந்த குட்டி டான்சர் யார் என்று ஊகிக்க முடிகிறதா?” என்ற தலைப்புடன் (Caption) இந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

1992-ம் ஆண்டு வெளியான ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வினீத், அடுத்து ஜாதி மல்லி, அர்ஜூனுடன் ஜெண்டில்மேன், சரத்குமாருடன் சிம்மராசி, நெப்போலியனுடன் கரிசக்காட்டு பூவே, ரஜினியுடன் சந்திரமுகி, காதல் தேசம், சக்தி, மே மாதம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள வினீத், டப்பிங் கலைஞராகவும் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். 

நடிப்போடு நடனத்தையும் சமமாக முன்னோக்கி கொண்டு செல்லும் கலைஞர் தான் வினீத். கேரளாவில், தலச்சேரியிலுள்ள செயின்ட் ஜோசப் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தான் வினிதின் கல்வி பயின்றார். பிரபல நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான ஷோபனாவின் உறவினருமான வினித், பள்ளிப் பருவம் முதலே பரதநாட்டியத்தில் பல பரிசுகளை பெற்றுள்ளார். மாநில பள்ளி இளைஞர் விழாவில் பரதநாட்டியப் போட்டியில் தொடர்ந்து 4 முறை முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் ‘கலாபிரதிபா’ பட்டத்தையும் வினித் வென்றுள்ளார்.

1985-ல் ஐ.வி. சசியின் ‘இடநிலங்ஙள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது 16-வது வயதில் வினித் சினிமா உலகிற்குள் நுழைந்தார். பின்னர் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் வினித் முத்திரை பதித்தார். 1986-ல் வெளியான ‘நகக்ஷதங்ஙள்’ திரைப்படத்தின் மூலம் அவர் பரவலான கவனத்தைப் பெற்றார். 2004-ல் வினிதிற்கு திருமணம் நடந்தது. பிரிசில்லா மேனன் இவருடைய மனைவி ஆவார். சமீபகாலமாக டப்பிங் கலைஞராகவும் வினித் கவனம் ஈர்த்து வருகிறார். 

மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’, ‘மரைக்காயர்’ ஆகிய திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்த வினிதிற்கு, சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருதும் கிடைத்தது. இத்தனை வருடங்களாக நடிப்புத் துறையில் இருந்தாலும், டப்பிங் கலைஞராக விருது பெறுவது இதுவே முதல் முறை. இது எனது இரண்டாவது மாநில அரசு (State) விருது. முதலாவது விருது 2016-ல் ‘காம்போஜி’ திரைப்படத்திற்காக சிறந்த நடன அமைப்பாளராகப் (Choreographer) பெற்றது,” என்று தனக்குக் கிடைத்த விருது குறித்து வினித் முன்பு ஒருமுறை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு தீரன், டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ், எக்கோ, சர்வம் மாயா போன்ற திரைப்படங்களில் வினித் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் ‘சீக்ரெட் ஸ்டோரிஸ் ரோஸ்லின்’ என்ற வெப் சீரிஸிலும் (Web Series) வினித் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.



Source link