நமது நிருபர்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி, பாரமுல்லா மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நிவாரண பணிகள் முடங்கின. மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. பாதுகாப்பு படை வீரர்கள், கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலைக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பல வயதான கிராமவாசிகளைப் பாதுகாப்பாக மீட்டனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் மீண்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
