10 மீட்டர் புடவை, ஆனா 3 வினாடில கட்டிடலாம்; தேவதாஸ் படத்திற்காக உருவான ஐஸ்வர்யாவின் வித்தியாசமான புடவை

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியான ‘தேவதாஸ்’ படம் இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமான ஒரு காட்சி விருந்தாகும். இந்தத் திரைப்படம் வெளியாகி இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் அடையாளமாக மாறிய ஆடைகளுக்குப் பின்னால் உள்ள கைவினைத்திறனையும் யோசனையையும் ஆடை வடிவமைப்பாளர் (Costume Designer) நீதா லுல்லா வெளிப்படுத்தியுள்ளார். 

‘ஹாட்டர்ப்ளை’ (Hauterrfly) ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், துணிகளைத் தேர்ந்தெடுத்தது முதல் எம்பிராய்டரி மற்றும் பாவாடை வரை, இயக்குநரின் பிரம்மாண்டமான சினிமா பார்வைக்கு ஏற்ற வகையிலும், படப்பிடிப்பு நேரத்தில் பயன்படுத்துவதற்கு எளிதான முறையிலுமே ஆடைகள் தயாரிக்கப்பட்டதாக லுல்லா கூறினார்.

தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயின் ராயல் புளூ சில்க் புடவை

ஐஸ்வர்யாவின் ராயல் புளூ புடவை குறித்து பேசிய லுல்லா, இன்று சந்தையில் கிடைக்காத அரிய வகை ‘ஸ்பன் சில்க்’ துணியை அதற்காக பயன்படுத்தினோம் “நான் பயன்படுத்திய துணி ‘ஸ்பன் சில்க்’ என்று அழைக்கப்படும் ஒன்று. இந்தப் புடவையின் பாவாடை ப்ரோகேட் துணியால் செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ஓடும்போதோ அல்லது வேறு ஏதேனும் செய்யும்போதோ புடவை விலகி மேலே தூக்கினாலும் அதன் அழகு குறையாமல் இருக்க, ஜாமவார் ப்ரோகேட் கொண்டு இது தைக்கப்பட்டது,” என்று லுல்லா கூறினார்.

புடவை சுமார் 10 மீட்டர் நீளம் கொண்டது என்றாலும், படப்பிடிப்பு தளத்தில் ஆடைகளை மாற்றுவதை எளிதாக்குவதற்காக இது முன்கூட்டியே மடிப்புகள் வைத்து தைக்கப்பட்டிருந்தது. இதனால் மூன்று அல்லது நான்கு வினாடிகளுக்குள் அவர்களால் அதை உடுத்திக் கொள்ள முடிந்தது. புடவையில் உள்ள எம்பிராய்டரிகள் கம்பளி வேலைப்பாடுகளும் பட்டும் கலந்து சர்தோசி தக்கா முறையில் செய்யப்பட்டுள்ளன. ஒரு பாரம்பரியத் தன்மையைக் கொடுப்பதற்காக ஐவரி நிற முத்துக்களும் தைக்கப்பட்டிருந்தன,” என்று நீதா லுல்லா விளக்கினார்.

பசுமை நிறப் புடவையின் பின்னணி

‘டோலா ரே டோலா’ (Dola Re Dola) என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் தொட்டு முன்பு ஐஸ்வர்யா அணிந்திருந்த பச்சை நிறப் புடவை பாரம்பரிய டாக்கை (Dhakai) வடிவமைப்புகளில் இருந்தே இதன் எம்பிராய்டரி உத்வேகம் பெற்றது “டாக்கை புடவையின் வடிவங்கள் தான் இதன் எம்பிராய்டரியில் உள்ளன. பிளவுஸ் மற்றொரு சில்க் துணியில் நெட் வைத்து சர்தோசி வேலைப்பாடு செய்யப்பட்டதாகும். ஆடைகளை வடிவமைக்கும் போது அழகிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அதை அணிவதற்கான எளிமைக்கும் கொடுத்தோம். 

aishwarya-rai-bachchan-devdas-saree-1-2026-07-23-13-58-40

“புடவை கட்டுவதில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள யோசனை. இந்த நீல நிறப் புடவையை அணிந்து அவர்கள் அமர்ந்திருக்கும் காட்சியை நீங்கள் கவனித்தால், அதன் பின்னணி பாசி பச்சை நிறத்திலும், கதகதப்பான விளக்கு வெளிச்சத்திலும் இருப்பதைக் காணலாம். நீல நிறப் புடவைக்கு பின்னால் உள்ள கருத்தைப் பற்றி விவரிக்கும் போது, பன்சாலியின் பிரம்மாண்டத்தை நிலைநிறுத்திக்கொண்டு, ஐஸ்வர்யாவின் கதாபாத்திரமான பார்வதி என்ற திருமணமான பெண்ணின் கண்ணியத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துவதற்காகவே அது பயன்படுத்தப்பட்டது 

வெள்ளை மற்றும் சிவப்பு நிறப் புடவைக்கு தொட்டு முன்பு வரும் காட்சி இது. எனவே, ஒரு கோயிலில் வைத்து மற்றொரு பெண்ணை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் ஒரு திருமணமான பெண்ணின் கம்பீரமும் உறுதியும் எங்களுக்குத் தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் பாரம்பரியமாகவும் அதே சமயம் வாழ்வை விடப் பெரியதான ஒரு பாணியையும் நாங்கள் கொடுத்தோம்,” என்று அவர் கூறினார்.

aishwarya-rai-bachchan-devdas-saree-3-2026-07-23-13-58-55

பல மாத கால ஆராய்ச்சியும் உழைப்பும்

இந்த ஆடைகளின் இறுதி வடிவமைப்பை எட்டுவதற்கும், ஆராய்ச்சிக்கும், தயாரிப்பிற்கும் பல மாதங்கள் எடுத்ததாக வெளிப்படுத்திய லுல்லா துணி வகைகளைப் பற்றிப் படிப்பதற்காக அவர் கொல்கத்தாவிற்குப் பயணம் செய்தார். இதற்கு “சுமார் ஆறு மாதங்கள் ஆனது. தேவதாஸ் படத்தில் உள்ள அனைத்து பெண் கேரக்டர்களுக்கும் நான்தான் ஆடை வடிவமைத்தேன். ஒவ்வொருவருடைய ஆடைகளும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதால், எந்த வகையான துணிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய நான் கொல்கத்தாவிற்குச் சென்றேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

கானில் (Cannes) ஐஸ்வர்யா ராயின் மஞ்சள் நிறப் புடவை

2002ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் முதன்முறையாகக் கலந்துகொண்டபோது ஐஸ்வர்யாவுடன் இணைந்து செய்த மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடை வடிவமைப்பு குறித்தும் லுல்லா பேசினார். ‘தேவதாஸ்’ படத்தின் சர்வதேச பிரீமியரின் போது ஷாருக்கான் மற்றும் பன்சாலியுடன் ரெட் கார்ப்பெட்டில் நடக்கும்போது ஐஸ்வர்யா அணிந்திருந்தது லுல்லா வடிவமைத்த மஞ்சள் நிறப் புடவையாகும்.

aishwarya-rai-bachchan-devdas-saree-4-2026-07-23-13-59-07

இந்த புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பின் பின்னணியில் உள்ள உத்வேகத்தை விவரிக்கும் போது, இந்தியாவின் ஆடைப் பாரம்பரியத்தை உலக மேடைக்கு அறிமுகப்படுத்துவதே நோக்கமாக இருந்தது என்று லுல்லா கூறினார். “முதன்முறையாக இந்தியாவைக் கானுக்குக் கொண்டு சென்ற தருணம் அது. நமது எம்பிராய்டரி பாரம்பரியத்தின் தனித்துவம் மாறாமல், ‘தேவதாஸ்’ படத்திலிருந்தே உத்வேகம் பெற்று, டாக்கை பனாரசி நெட் (Dhakai Banarasi Net) பயன்படுத்தி ஒரு புடவையை உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. 

மேற்கத்திய ஊடகங்கள் அதுவரை பார்த்திராத ஒரு பிரம்மாண்டமான ஆடை உடுத்தும் பாணியும் (Draping style), வைரங்களுக்குப் பதிலாகப் பாரம்பரிய தங்க நகைகளும் பயன்படுத்தப்பட்டன. மிக எளிமையான, ஆனால் அதீத அழகான ஒரு இந்திய தோற்றமாக அது இருந்தது,” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

Source link