இந்த பேச்சுவார்த்தையில், ஒன்றிய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல, கரப்பான் பூச்சி கட்சியின் சார்பாக சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், நீட்டால் உயிர் இழந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை மதியம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து விவாதம் நடைபெற வாய்ப்பிருப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்ற்னர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
