பாரிஸ்: காட்டுத்தீ எதிரொலியாக பிரான்சின் சுற்றுலாத்தலமான கேப்பெரெட் தீபகற்பத்தில் இருந்து அனைவரும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் லேஜ்கேப் பெரெட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன், பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த நகரம் ஒரு கடலோர சுற்றுலா நகரம் ஆகும். காற்றின் வேகம் அதிகரித்ததால், மளமளவென தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
கிட்டத்தட்ட 4900 ஏக்கர் பரப்பளவில் தீ பரவ தொடங்கியது. கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால் தென்மேற்கு கடற்கரையில் உள்ள கேப் பெரெட் தீபகற்பத்தில் இருந்து மக்களை முழுமையாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதுவரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என 10,000க்கும் மேற்பட்டோர் அவரசமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
