'நான் இனவெறியன் கிடையாது': என்கிறார் எலான் மஸ்க்!

வாஷிங்டன்: தன் மீது சுமத்தப்பட்டுள்ள இனவெறி குற்றச்சாட்டை மறுத்துள்ள எக்ஸ், ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க், ‘ எனது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மகனுக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி உள்ளேன்,’ என விளக்கமளித்து உள்ளார்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவர், எக்ஸ் சமூக வலைதளம், மின்சார கார் நிறுவனமான டெஸ்லா, செயற்கை க் கோள் வாயிலாக இணைய சேவை வழங்கும் ஸ்டார்லிங் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் எலாஸ் மஸ்க். அவர் இனவெறிக்கு ஆதரவானவர் என குற்றம்சாட்டப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு மக்கள் இடம்பெயர்வதை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு எலான் மஸ்க் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் இன்வெறி மற்றும் வலதுசாரி கொள்கையை ஆதரிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு எலான் மஸ்க் அளித்த பதில்: எனது மனைவி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் வாயிலாக நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி உள்ளேன்( இந்தியாவை சேர்ந்த சுப்பிரமணியம் சந்திரசேகர் பெயரை சேர்த்து, தன் மகனுக்கு ஸ்டிரைடர் சேகர் என எலான் மஸ்க் சூட்டி உள்ளார்). எனவே நான் இனவெறி ஆதரவாளர் கிடையாது. என் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள். அங்கும் இனவெறி இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link